வைக்கோல் நார்சத்து அதிகம் உள்ள தீவனம் ஆகும். இவற்றில் உள்ள அதிகமான நார்ச்சத்து அசைப்போடும் கால்நடைகளுக்கு தேவையான கலோரிகளைத் தருகிறது. ஆனால் லிக்னின் எனப்படும் பொருள் நார்சத்தினை நல்ல முறையில் செரிக்கவிடாமல் தடுத்துவிடுகிறது. இந்த லிக்னினை நீக்குவோமானால், வைக்கோலில் உள்ள நார்சத்து நன்கு செரிக்கப்பட்டு அதன் மூலம் அதிகம் ஊட்டச்சத்து கிடைக்கும். யூரியாவைக் கொண்டு வைக்கோலில் உள்ள லிக்னினை எளிய முறையில் நீக்கலாம்.
தேவையான பொருட்கள்
• வைக்கோல் – 100 கிலோ
• யூரியா - 4 கிலோ
• சுத்தமான தண்ணீர் – 60 லிட்டர்
• பாலித்தீன் படுதாய் நன்கு மூடும் அளவிற்கு
செயல்முறை
நல்ல சுத்தமான தரை அல்லது சிமெண்ட் தரை மீது சிறிது வைக்கோலைப் பரப்பி அதன் மேல் 10 கிலோ வைக்கோலை பரப்பவும்.
யூரியா கரைசலை வைக்கோல் லேசாக நனையும்படி தெளிக்கவும்.
பின் அதனை நன்றாக மிதித்து காற்றினை வெளியேற்றவும்.
இதுபோல் படிப்படியாக வைக்கோலை பத்து பத்து கிலோவாக பரப்பி, மொத்த வைக்கோலையும் பரப்பி அனைத்து யூரியா கரைசலை தெளிக்கவும்.
இறுதியாக நன்றாக மிதித்து எல்லா காற்றையும் வெளியேற்றவும்
பாலிதீன் படுதாய் கொண்டு காற்று புகாமல் நன்கு மூடி வைக்கவும்.
அப்படியே 3 வாரங்களுக்கு விட்டுவிடவேண்டும்.
பிறகு மேல் அடுக்கில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து உபயோகப்படுத்தலாம்.
கால்நடைகளுக்கு அளிக்கும் முறை
முதலில் 1 கிலோ அளவில் 1 வாரத்திற்கும் பிறகு தினம் 10 கிலோ வரை.
அடர் தீவனத்தை 1 - 1.5 கிலோ அளவுக்கு குறைக்கலாம்.
6 மாதம் வயதுக்கு கீழ் உள்ள கன்றுகளுக்கு வழங்ககூடாது.
நன்மைகள்
• வைக்கோலின் செரிமானத்தன்மையும்,புரதத்தின் அளவும் அதிகரிக்கிறது.
• கால்நடைகளின் தீவனச் செலவு 20-30 சதவீதம் குறைகிறது.
• 0.5 முதல் 2 லிட்டர் வரை பால் உற்பத்தி அதிகமாகிறது.
.......................................................................