skip to main |
skip to sidebar
- நாட்டுக் கோழி வளர்ப்பு - நாட்டு கோழிகள் என்பது புறக்கடையில் அதாவது வீட்டை சுற்றியுள்ள இடத்தில் சுற்றி திரிந்து கிடைக்கும் பூச்சி , புழு மற்றும் சிதறிய தானியங்கள் ஆகியவற்றை உண்டு வளர்ந்து வருபவை. இது பழங்காலத்தில் நம் முன்னோர்களால் வீட்டின் புரத தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட முறையாகும்.
- பழங்கால முறைகளில் உள்ள குறைகளை களைந்து ஒரு சிறப்பான லாபகரமான முறையை பின்பற்றி நாட்டு கோழி வளர்ப்பில் நல்ல லாபம் அடையலாம்
- நாட்டு கோழிகளில் குஞ்சுககளை பருந்து, காகம் மற்றும் கீரி போன்றவைகள் வேட்டையாடி இழப்புகளை ஏற்படுத்தும். இதனை சரி செய்ய குஞ்சுகள் பிறந்து ஒரு மாதம் வரை தாய்கோழியையும் குஞ்சுகளையும் வெளியே அதிகம் விடாமல் ஒரு சின்ன கொட்டகையே உருவாக்கி வளர்த்தலாம்.
- நாட்டு கோழி வளர்ப்பில் தீவனம் சரியான அளவில் மற்றும் சரியான விகிதத்தில் கொடுக்கலாம். சோளம் , உடைந்த அரிசி மற்றும் கரையான்களை உற்பத்தி செய்து கொடுக்கலாம்.
- புழு மற்றும் பூச்சிகள் கிடைக்காத கோடை மாதங்களில் கோழிகளில் வளர்ச்சி குறைவு, முட்டைகள் குஞ்சு ப் பொரிக்கும் விகிதம் குறைவு மற்றும் பிறந்த குஞ்சுகளின் இறப்பு ஆகியவை காணப்படும். இவையனைத்தும் புரத சத்து குறைப்பாட்டினால் ஏற்படுகிறது. இதை சரி செய்ய ஒரே சிறந்த மற்றும் எளிய முறை கரையான் உற்பத்தி மட்டுமே. இதை சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.
- நாட்டு க் கோழி வளர்ப்பில் குடற்புழு நீக்கம் மற்றும் கோழிக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவற்றை கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி தவறாமல் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்